Published : 27 Nov 2020 11:01 AM
Last Updated : 27 Nov 2020 11:01 AM

பூராடம், உத்திராடம், திருவோணம் ; உங்களுக்கான தாரா பலன்கள், க்ஷேம தாரை, மைத்ர தாரை, வதை தாரை, சம்பத்து தாரை நட்சத்திரங்கள் என்னென்ன?  27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 95; 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

தாராபலம் என்னும் சிறப்பான பலன்களை தரக்கூடிய அம்சங்களைப் பார்த்து வருகிறோம். இந்த பதிவை வாசிப்பதற்கு முன் 87வது பதிவை மீண்டும் ஒரு முறை நீங்கள் படித்துப் பார்த்துக் கொள்வதோ அல்லது தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதோ நல்லது.

இந்தப் பதிவில் பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கு தாரா பலம் பற்றிய விவரங்களை முழுமையாகப் பார்ப்போம்.

பூராடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கு ஜென்ம தாரையாக வரக்கூடிய நட்சத்திரங்கள்:

பூராடம், பரணி, பூரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ஜென்ம நட்சத்திரமாகவே வேலை செய்யும். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் அனைத்து சுப விஷயங்களும், முக்கியமான காரியங்களும் செய்யலாம். ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது. மேலும் முடி திருத்துதல், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நகம் வெட்டுவது, தாம்பத்தியம் போன்றவை கூடாது. இதைத் தவிர மற்ற அனைத்து விதமான காரியங்களும் மேற்கொள்ளலாம்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
உத்திராடம், கார்த்திகை, உத்திரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களும் முழுமையான வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். சிறு குறையும் இல்லாத வெற்றியாக இருக்கும். எல்லாவிதமான முயற்சிகளுக்கும் ஏற்றதாக இருக்கும். நண்பர்கள் அமைவதும் மிகச்சிறந்த நற்பலன்களை தரும்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களும் லாபம் தரக் கூடியதாக இருக்கும். சொத்துகள் சேரும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -
பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தையும் யோகத்தையும் தருவதாக இருக்கும். வேலைகளுக்கு மனு செய்வது, பதவி உயர்வு, பதவி ஏற்பது, அரசியல் தொடர்பான நகர்வுகளைச் செய்வது, முக்கியமான காரியங்களில் உங்களுக்கு வெற்றியை சாதகமாக்கிக் கொள்வது, வழக்குகளில் வெற்றி பெற இந்த நாட்களில் வழக்கு தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது போன்றவை உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.


மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
ரேவதி, ஆயில்யம், கேட்டை -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு மைத்ரம் எனும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் அதிகப்படியான லாபத்தை கிடைக்கப்பெறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது, வியாபார விஷயங்களை மேற்கொள்வது, வியாபாரப் பயணங்கள் மேற்கொள்வது, வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது, ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்களில் ஈடுபடுவது என அனைத்தும் உங்களுக்கு அதிகப்படியான... இன்னும் சொல்லப்போனால் இரட்டிப்பு லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

அதிமைத்ர தாரை நட்சத்திரங்கள் -
மூலம், அஸ்வினி, மகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் மிக உதவிகரமாகவும், லாபகரமாகவும், மன நிறைவைத் தரக் கூடியதாகவும் இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கப் பெறக் கூடியதாகவும் இருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வது, அயல்நாடுகளில் நிரந்தரமான குடியுரிமை பெறுவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு நன்மைகளை..... அதிகப்படியான நன்மைகளை தரக் கூடியதாக இருக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -
திருவோணம், ரோகிணி அஸ்தம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் முழுமையடையாமல் பாதியிலேயே விட வேண்டியதாக இருக்கும். அல்லது நிறைவேறாமல் போகும். பயணங்களை மேற்கொள்ள கூடாது, புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது, முக்கியமான காரியங்களில் ஈடுபடக்கூடாது. திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு பெண் பார்க்கப் போவது, மாப்பிள்ளை வீடு பார்க்கப் போவது போன்றவை செய்யக்கூடாது. இந்த நட்சத்திரக்காரர்கள், நண்பர்களாக அமையவே கூடாது, நண்பர்களாக அமைந்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டியது வரும்.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு திரை நட்சத்திரங்கள். அதாவது, பிறருக்கு நன்மை தமக்கு எந்தவிதமான ஆதாயமும் இருக்காது என்று அர்த்தம். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் அடுத்தவர்களுக்கு ஆதாயத்தைத் தருமே தவிர உங்களுக்கு எந்த வகையிலும் ஆதாயம் கிடைக்காது. எனவே இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்களில் உங்களுடன் சேர்ந்தவர்கள் லாபத்தை அனுபவிப்பார்கள். உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது. நண்பர்களாக அமையும் பட்சத்தில் அந்த நண்பர்களுக்காகவே நீங்கள் அனைத்து வேலைகளையும் செய்வதும், செலவுகளை செய்வதுமாக இருக்கும். அவர்களால் எந்தவிதமான உதவிகளும் நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்காது.

வதை தாரை நட்சத்திரங்கள் -
உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணும். இன்னும் சொல்லப்போனால் கடுமையான பாதிப்புகளையும், மீளமுடியாத துயரத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த விஷயமும் உங்களுக்கு பயன் தராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நண்பர்களாக அமையும் பட்சத்தில் கடுமையான சிக்கலில் உங்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பி விடுவார்கள். குறிப்பாக பண விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
********************

உத்திராடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கான தாராபலம் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
உத்திராடம், கார்த்திகை, உத்திரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
திருவோணம், ரோகிணி அஸ்தம். -

இந்த மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -
உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இம் மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு சாதக தாரை நட்சத்திரங்களாகும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை நட்சத்திரங்கள்.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
பூரம், பூராடம், பரணி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளைத் தரக்கூடிய அதி மைத்ர நட்சத்திரங்களாகும்.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்களாகும்.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை என்னும் பிறருக்கு மட்டுமே நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -
கேட்டை, ரேவதி, ஆயில்யம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை எனும் மன நிம்மதியை பாதிக்கக்கூடிய வதை நட்சத்திரங்களாகும்.
************************

திருவோணம் நட்சத்திரம்

திருவோணம் நட்சத்திரத்திற்க்கான தாராபலம் நட்சத்திரங்களை பார்ப்போம்.

ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -
திருவோணம், ரோகிணி, அஸ்தம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் ஜென்ம தாரை நட்சத்திரங்களாகும்.

சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -
அவிட்டம், மிருகசீரிடம் சித்திரை -

இம்மூன்று நட்சத்திரங்களும் சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும், எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.

க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -
பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேமம் என்னும் பரிபூரண நன்மைகளைத் தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

சாதக தாரை நட்சத்திரங்கள் -
ரேவதி, ஆயில்யம், கேட்டை -

இந்த மூன்று நட்சத்திரங்களும், உங்களுடைய அனைத்துக் காரியங்களையும் சாதகமாக மாற்றி ஆதாயம் தரக்கூடிய சாதக தாரை நட்சத்திரங்களாகும்.

மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
பூராடம், பரணி, பூரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு நன்மைகளை தரக் கூடிய நட்சத்திரங்கள். அனைத்தும் சுபமாக இருக்கும்.

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -
உத்திராடம், கார்த்திகை உத்திரம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ரம் எனினும் அதிகப்படியான நன்மைகளை தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

விபத்து தாரை நட்சத்திரங்கள் -
சதயம், திருவாதிரை, சுவாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் கடுமையான பாதிப்புகளையும் துயரங்களையும் தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -
உத்திரட்டாதி, பூசம், அனுஷம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு எந்த வகையிலும் நன்மை தராத, ஆனால் மற்றவர்களுக்கு மட்டுமே ஆதாயம் தரக்கூடிய நட்சத்திரங்கள் ஆகும்.

வதை தாரை நட்சத்திரங்கள் -
மகம், மூலம், அஸ்வினி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் கடுமையான பாதிப்புகளையும், தீராத துயரங்களையும், மன உளைச்சலையும் தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அன்பார்ந்த வாசகர்களே.

மீண்டும் நினைவூட்டுகிறேன். 87வது அத்தியாயத்தை நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்து இந்தப் பதிவை படித்துப் பார்த்தால் மட்டுமே உங்களுக்கு இன்னும் பல தகவல்கள் மிக எளிதாகப் புரியவரும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

அடுத்த பதிவில் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கான தாரா பலம் பற்றிய பட்டியலைப் பார்ப்போம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

- வளரும்
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x