Published : 25 Nov 2020 06:25 AM
Last Updated : 25 Nov 2020 06:25 AM
மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குதூகலம் காணப்படும். பேச்சில் நிதானம் தேவை. கலைப்பொருட்கள் சேரும்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். நவீன ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கன்னி: மனோபலம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள்.
துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
விருச்சிகம்: வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். அயல்நாடு செல்ல திட்டமிடுவீர்கள்.
மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.
கும்பம்: புதிதாக சொத்து வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
மீனம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT