Published : 21 Nov 2020 05:55 AM
Last Updated : 21 Nov 2020 05:55 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். நவீன மின்சாதனம் வாங்குவீர்கள்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லி கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: தடைகள், பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளால் சில காரியங்கள் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: நண்பர்கள், உறவினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ரகள்.

விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீ்ரகள்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். யாரை நம்புவது என்பதில் குழப்பம் வரும். காசோலைகளை கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: வேலைச்சுமை இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கலாகி முடியும். சோர்வு, களைப்பு வரும். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது.

மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x