Published : 19 Nov 2020 06:20 AM
Last Updated : 19 Nov 2020 06:20 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக முயற்சியில் ஈடுபடுவீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது பண பற்றாக்குறையும் ஏற்படும். மூத்த சகோதரர் வகையில் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்: மனஇறுக்கம் குறையும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உடன்பிறந்தோரால் நன்மை உண்டு.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனம் மற்றும் மின் சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x