Published : 18 Nov 2020 06:08 AM
Last Updated : 18 Nov 2020 06:08 AM
மேஷம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று வெற்றிகரமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கன்னி: மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் நீங்கும். பணவரவு உண்டு.
துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.
மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ரகள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
மீனம்: அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT