Published : 17 Nov 2020 06:41 AM
Last Updated : 17 Nov 2020 06:41 AM
மேஷம்: எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும்.
ரிஷபம்: பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி: உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள்.
துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விருச்சிகம்: உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது.
தனுசு: மனஇறுக்கத்துடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். தாயாரின் ஆதரவு உண்டு.
மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடங்குவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT