Published : 16 Nov 2020 07:17 AM
Last Updated : 16 Nov 2020 07:17 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், எதிர்பாராத செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம்: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பயணம் சாதகமாக அமையும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் போகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பண பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி குறையும்.

தனுசு: அலைச்சல், தூக்கமின்மை ஏற்படக் கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். வாகனம் தொல்லை தரும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். முக்கிய பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x