Published : 12 Nov 2020 06:25 AM
Last Updated : 12 Nov 2020 06:25 AM
மேஷம்: எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.
ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவெடுப்பீர்கள்.. வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே நிதானம் தேவை. வாகனம் செலவு வைக்கும்..
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். திட்டமிடாத செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
விருச்சிகம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தந்தைவழி சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.
தனுசு: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்: காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள்.. எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT