Published : 10 Nov 2020 06:26 AM
Last Updated : 10 Nov 2020 06:26 AM
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும். வழக்கில் வெற்றியுண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனதில் நிலவிவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு உண்டு.
கடகம்: எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையைத் தரும்.
சிம்மம்: வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படக் கூடும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகளை தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கன்னி: சுபச்செலவுகள் உண்டு. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள் நல்ல காற்றோட்டத்துடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.
துலாம்: பிள்ளைகளால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரர் வகையில் உதவியுண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேற்றுமொழி பேசுபவர்களால் நன்மை ஏற்படும்.
மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவு ஏற்படக் கூடும். வாகனம் செலவு வைக்கும். அக்கம்பக்கத்தினருடன் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை ஏற்படும். கலைப்பொருட்கள் சேரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT