Published : 08 Nov 2020 06:30 AM
Last Updated : 08 Nov 2020 06:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீ்ரகள்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் சில காரியங்கள் நிறைவேறும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: சமயோஜிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கடனை திருப்பிச் செலுத்த வழி பிறக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x