Published : 07 Nov 2020 06:25 AM
Last Updated : 07 Nov 2020 06:25 AM
மேஷம்: புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலை புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: சில சமயங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.
சிம்மம்: திடீர் செலவுகள் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது நகை வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.
துலாம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். அநாவசிய செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விஐபிகளின் ஆதரவுடன் சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீர வழிபிறக்கும்.
விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்
தனுசு: பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் வரக் கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நவீன ரக மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மீனம்: புதிய திட்டங்கள் மளமளவென்று நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment