Published : 03 Nov 2020 06:16 AM
Last Updated : 03 Nov 2020 06:16 AM
மேஷம்: தொட்ட காரியங்கள் துலங்கும். அறிஞர்களின் நட்பு கிட்டும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வீண் வாக்கு வாதங்கள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக் கூடும். சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.
மிதுனம்: அநாவசிய செலவுகளைக் குறைத்து சிக்கனத்தை கடைபிடியுங்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். யோகா, தியானத்தில் மனதை செலுத்துங்கள்.
கடகம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். புது வேலை அமையும். வருமானம் அதிகரிக்கும். ஆட்சியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்கும் கனவு நனவாகும்.
சிம்மம்: பிற மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் ஒருவர் அறிமுகமாவார். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்.
துலாம்: எந்த காரியத்திலும் பொறுமை காப்பது நல்லது. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு திருப்தி தரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். வீடு, மனை வாங்குவது விற்பது சுமுகமாக முடியும்.
மகரம்: தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். வீண் விவாதங்களை ஒதுக்குவீர்கள். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்: உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: மன தைரியம் அதிகரிக்கும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT