Published : 02 Nov 2020 05:52 AM
Last Updated : 02 Nov 2020 05:52 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். உடல்நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
ரிஷபம்: வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். முன்கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். வாகனம் செலவு வைக்கும்..
கடகம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்..
கன்னி: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள்.
துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்
விருச்சிகம்: திறமைகள் வெளிப்படும். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள்.
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
கும்பம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் எதிர்பாராமல் கருத்து மோதல்கள் வரும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் உயர் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT