Published : 01 Nov 2020 06:11 AM
Last Updated : 01 Nov 2020 06:11 AM
மேஷம்: முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்த ஒருவரை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடனை திரும்பச் செலுத்த வழி பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
கன்னி: குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
துலாம்: சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ரகள்..
விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் நீண்ட நாட்களுக்குப் பின் மனம்விட்டு பேசுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: சில காரியங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.
மீனம்: உறவினர், விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT