Published : 31 Oct 2020 05:56 AM
Last Updated : 31 Oct 2020 05:56 AM
மேஷம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்..
சிம்மம்: இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அடிக்கடி கோபம் ஏற்படும்..
துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு
மகரம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: சகோதரர் தக்கசமயத்தில் உதவுவார்கள். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.
மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். எதிர்பார்த்த செய்தி வந்துசேரும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT