Published : 28 Oct 2020 06:28 AM
Last Updated : 28 Oct 2020 06:28 AM
மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சரி செய்வீர்கள். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
கடகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
சிம்மம்: முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள்கூட இழுபறியாகும். பெற் றோருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: உறவினர்களால் அனுகூலமும் உண்டு. நீண்டநாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலகியிருந்த உற வினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.
தனுசு: பழைய சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவுகளுடன் கருத்து மோதல் வரக் கூடும். புது வேலை கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும்.
மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். வீடு மாறுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கும்பம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் பிரபலமானவர்களுடன் நட்பு ஏற்படும்.
மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT