Published : 27 Oct 2020 05:56 AM
Last Updated : 27 Oct 2020 05:56 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் -மனைவி இடையே மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் தொகையை திருப்பி செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

கடகம்: வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. கணவன் - மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். மின்சாதனங்கள் பழுதாகக் கூடும்.

சிம்மம்: குழப்பம் நீங்கி திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். மனைவிவழியில் உதவியுண்டு.

கன்னி: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். விஐபிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பால்ய நண்பரால் நன்மை உண்டு.

துலாம்: உறவினர்கள், நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவதற்கான திட்டம் தீட்டுவீர்கள். கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டிருந்த காரியம் இப்போது கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். புது வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும்.

மகரம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடு நடக்கும். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின்னர் கைக்கு வரும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கம் விலகும்.

கும்பம்: வீண் பகை, விரயச் செலவு, முன்கோபம் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x