Published : 24 Oct 2020 05:58 AM
Last Updated : 24 Oct 2020 05:58 AM
மேஷம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாகக் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துச் நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம்.
கடகம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
சிம்மம்: பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். பழைய கடனை பைசல் செய்ய ஒருபுறம் யோசித்தாலும், மற்றொருபக்கம் சொத்து வாங்க புது கடன் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள்.
கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
துலாம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ர்கள்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
தனுசு: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மகரம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.
கும்பம்: தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT