Published : 23 Oct 2020 05:56 AM
Last Updated : 23 Oct 2020 05:56 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். மனஉளைச்சல் அதிகரிக்கக் கூடும். பிற்பகல் முதல் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். தாயார் ஆதரித்து பேசுவார். பிற்பகல் முதல் நிதானம் தேவை.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளில் சாதுர்யம் வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள்.

துலாம்: அதிகம் உழைக்க வேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும்.

மகரம்: குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.

கும்பம்: கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்-. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.

மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x