Published : 22 Oct 2020 06:19 AM
Last Updated : 22 Oct 2020 06:19 AM
மேஷம்: நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.
மிதுனம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேலை தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.
கடகம்: அறிவுப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு திடீர் உடல்நலக் குறைவு வந்து நீங்கும். கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.
துலாம்: முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு.
விருச்சிகம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். கடன் தொகையை திருப்பி செலுத்துவீர்கள். மனதில் ஒருவித புத்துணர்ச்சி காணப்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
தனுசு: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகக் கூடும். அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது.
மகரம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT