Published : 21 Oct 2020 06:29 AM
Last Updated : 21 Oct 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்: குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும்

சிம்மம்: கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

துலாம்: எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள்.

விருச்சிகம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: வேலைச்சுமையால் சோர்வு, டென்ஷன் ஏற்படக் கூடும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.

மகரம்: நவீன மின்சாதனங்கள் வாஙகுவீர்கள். யாருக்கும் பணம், வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிட்டும்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x