Published : 20 Oct 2020 06:55 AM
Last Updated : 20 Oct 2020 06:55 AM
மேஷம்: முக்கிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். சகோதரர் வகையில் அலைச்சல்களும், செலவினங்களும் இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.
ரிஷபம்: நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்விக்கும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு உண்டு.
மிதுனம்: சவால்கள், எதிர்ப்புகளை சாதுர்யமாக முறியடித்து முன்னேறுவீர்கள். தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்களையும் முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.
கடகம்: திட்டங்களை செயல்படுத்த வழிவகுப்பீர்கள். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் தொகை வசூலாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். பால்ய நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும்.
கன்னி: தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.
துலாம்: எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. கணவன் - மனைவிக்குள் எதிர்பாராத மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படக் கூடும்.
தனுசு: குடும்ப ரகசியங்களை வெளியாரிடம் பகிர வேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
மகரம்: பணப் பற்றாக்குறை நீங்கும். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த சொத்து பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். பணவரவு உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT