Published : 10 Oct 2020 06:45 AM
Last Updated : 10 Oct 2020 06:45 AM
மேஷம்: நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர் மத்தியில் மதிப்பு உயரும்.
ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். மாலை முதல் பிரச்சினைகள், குழப்பங்கள் விலகும்.
கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்: கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் விலகும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: காரியங்களை அவசரப்படாமல் பொறுமையுடன் கையாளுங்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். மாலை முதல் தடைகள் விலகும்.
தனுசு: குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். எந்த விஷயமானாலும் சற்று எச்சரிக்கை அவசியம்.
மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனம் செலவு வைக்கும்.
கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசிய செலவுகளை தவிர்த்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: கடனை தீர்ப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT