Published : 08 Oct 2020 06:28 AM
Last Updated : 08 Oct 2020 06:28 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் திட்டமிட்டபடி முடியும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்குகள் சாதகமாகும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பிரபலங்களின் சந்திப்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். ரசனைக்கேற்ப வீட்டை மாற்றியமைப்பீர்கள்.

மிதுனம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். யாருக்காகவும் உத்தரவாத கையெழுத்திட வேண்டாம்.

கடகம்: அநாவசிய செலவுகளைக் குறைத்து சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள்.

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.

துலாம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சியில் இறங்குவீர்கள்.

விருச்சிகம்: உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படும்.

தனுசு: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களும் உதவிகரமாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: தன்னம்பிக்கை பிறக்கும். குழப்பமாக இருந்துவந்த விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

கும்பம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூடிவரும். நல்ல நிறுவனத்தில் புது வேலை அமையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள்.

மீனம்: பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x