Published : 06 Oct 2020 06:25 AM
Last Updated : 06 Oct 2020 06:25 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உடல்நலம் சீராகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆன்மிக பயணம் உண்டு.
ரிஷபம்: வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் டென்ஷனை ஏற்படுத்தும். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள்.
கடகம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பணவரவு உண்டு.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.
கன்னி: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி, அமைதி பிறக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள்.
துலாம்: எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்
விருச்சிகம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். வழக்கு சாதகமாகும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
கும்பம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்: பேச்சில் அனுபவம் வெளிப்படும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்து பிரச்சினையில் சுமுக தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் உயர் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT