Published : 05 Oct 2020 06:31 AM
Last Updated : 05 Oct 2020 06:31 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கனவுத் தொல்லை, தூக்கமின்மை ஏற்படக் கூடும். தியானம், யோகாசனம் செய்யுங்கள். முக்கிய வேலைகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது நிதானம் தேவை. குலதெய்வ கோயிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனை பைசல் செய்வீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

கடகம்: எதிரிகளை சாதுர்யமாக வீழ்த்துவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றியுண்டு. வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கன்னி: அலைச்சல், டென்ஷன், வீண் விரயம் வந்துப் போகும். கடன் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு.

துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பேச்சில் மிடுக்குத் தெரியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்: முக்கிய பிரச்சினைகள் குறித்து பால்ய நண்பருடன் ஆலோசனை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: மனக்குழப்பங்களில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.

கும்பம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். வேற்று மதத்தவரால் நன்மை உண்டு.

மீனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x