Published : 04 Oct 2020 06:20 AM
Last Updated : 04 Oct 2020 06:20 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நீங்கள் சாதாரணமாக சொல்லக்கூடிய கருத்துகளைக்கூட சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள்.
ரிஷபம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு முயற்சிப்பீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு நிகழும்.
சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். வெளியூர் பயணம் ஏற்படும்.
துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். நவீனரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்த கொள்வார்கள்.
விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
தனுசு: மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.
மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். உடன்பிறந்தவர்கள் பண உதவி செய்வார்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும்.
மீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT