Published : 03 Oct 2020 06:40 AM
Last Updated : 03 Oct 2020 06:40 AM
மேஷம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.
மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். திடீர் பயணம் ஏற்படும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். எதிரிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
சிம்மம்: அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள்.
கன்னி: அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தால் பகை உண்டாகும். மனதை ஒருநிலை படுத்துங்கள்.
துலாம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும்..
மீனம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT