Published : 26 Sep 2020 06:33 AM
Last Updated : 26 Sep 2020 06:33 AM
மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நெருங்கிய நண்பருடன் நிலவிய மனக்கசப்பு விலகும்..
ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.
சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.
துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: வெகுநாட்களாக மனதை சங்கடப்படுத்திய பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தாருடன் அனுசரித்து செல்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.
மகரம்: பல வேலைகளை இழுத்துப்போட்ட பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துங்கள். மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்கள் முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT