Published : 23 Sep 2020 06:47 AM
Last Updated : 23 Sep 2020 06:47 AM
மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாகக் கூடும்.
ரிஷபம்: பணப்பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பயணம் உண்டு.
கடகம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
சிம்மம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து செல்வீர்கள்.
கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயலுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: அதிரடியாக திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் ஏற்படக் கூடும்.
மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மீனம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT