Published : 20 Sep 2020 06:31 AM
Last Updated : 20 Sep 2020 06:31 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். நேர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள்.

மிதுனம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய சந்தேக மனப்பான்மை நீங்கும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வீர்கள். கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு.

சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த சகோதரரின் ஆதரவு கிட்டும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். திடீர் பயணம் ஏற்படும்.

துலாம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை அடிக்கடி தலைதூக்கும். வாகன செலவு ஏற்படும்.

விருச்சிகம்: குடும்பத்தினர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும்.

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக அமையும்.

மகரம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்கள் செயல்களில் புத்திசாலித்தனம் தெரியும்.

கும்பம்: வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்கள்.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது சங்கடத்தை ஏற்படுத்தும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x