Published : 19 Sep 2020 06:46 AM
Last Updated : 19 Sep 2020 06:46 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டங்கள் தீட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

ரிஷபம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே பேச்சில், செயலில் நிதானம் தேவை.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தடுத்து செலவுகள் ஏற்படும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

விருச்சிகம்: ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் விலகும்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: கடினமான வேலைகளையும் சரியாக திட்டமிட்டு முடித்துக் காட்டுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.

மீனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x