Published : 17 Sep 2020 06:29 AM
Last Updated : 17 Sep 2020 06:29 AM
மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
ரிஷபம்: தைரியமாக முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். சகோதரர் வகையில் மகிழ்ச்சி உண்டு.
மிதுனம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
சிம்மம்: திட்டமிடாத செலவு, பயணம் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.
கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
விருச்சிகம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.
தனுசு: எதிரிகளை எளிதி்ல் சமாளிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் ஏற்படும்.
மகரம்: உங்களுடைய பலம், பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லை ஏற்படக்கூடும். மாலை முதல் தடைகள் விலகும்.
கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். எதையும் நிதானித்து, தீர ஆலோசித்து செயல்படுத்துவது நல்லது.
மீனம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் விலகும். வாகனம், வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT