Published : 16 Sep 2020 06:34 AM
Last Updated : 16 Sep 2020 06:34 AM
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் வெற்றியுண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.
கடகம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும்.
சிம்மம்: அடுத்தடுத்த வேலைகளால் சோர்வு, களைப்பு ஏற்படக் கூடும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் குறித்து தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
கன்னி: சுபச்செலவுகள் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: செல்வாக்கு உயரும். மனை வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பீர்கள். சகோதரர் வகையில் உதவியுண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு ஏற்படக் கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் அளவாக பழகுங்கள்.
கும்பம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். வேலை தொடர்பாக நல்ல செய்தி வரும்.
மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT