Published : 14 Sep 2020 06:25 AM
Last Updated : 14 Sep 2020 06:25 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். மூத்த சகோதரர் உதவுவார்.
ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும்.
மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.
கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவதிகள் ஏற்படக் கூடும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. முக்கியப் பிரமுகரின் உதவி கிடைக்கும். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பால்ய நண்பரை சந்திப்பீர்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள்.
தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலை தொடர்பான முயற்சியில் தாமதம் ஏற்படும்..
மகரம்: சாதுர்யமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: சமயோசித புத்தியுடன் செயல்பட்டு காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT