Published : 12 Sep 2020 06:29 AM
Last Updated : 12 Sep 2020 06:29 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மனதில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் நிலவிய இழுபறி நீங்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்: வெகுநாட்களாக மனதை உறுத்திவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகன செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் நீடிக்கும். பணவரவு உண்டு.

துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

தனுசு: வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும் பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர் கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து குடும்பத்தினரை அசத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x