Published : 10 Sep 2020 06:11 AM
Last Updated : 10 Sep 2020 06:11 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். வெளியூர் பயணத்தால் சில காரியங்கள் நிறைவேறும்.

சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பிரச்சினைகளை தீர்க்கும் சாமர்த்தியம் உண்டாகும்..

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீ்ரகள்.

துலாம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களிடையே கலந்து பேசி முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: புதிய திட்டங்கள் தடங்கலின்றி நிறைவேறும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டில் சில மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கடனை பைசல் செய்வீர்கள். மனைவிவழி உறவினர் தக்க சமயத்தில் உதவுவார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x