Published : 04 Sep 2020 06:30 AM
Last Updated : 04 Sep 2020 06:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திருமணம், சீமந்தம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பேச்சில், காரியங்களில் நிதானம் தேவை.

ரிஷபம்: ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்.

சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அவசியமின்றி தலையிட வேண்டாம்.

கன்னி: மனோபலம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடகு வைக்கப்பட்ட பொருட்களை மீட்பதற்கு வழி பிறக்கும்.

துலாம்: பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள்.

கும்பம்: வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

மீனம்: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x