Published : 03 Sep 2020 06:25 AM
Last Updated : 03 Sep 2020 06:25 AM
மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.
மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
சிம்மம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விஐபியுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்தவர்களின் மனம் மாறும்.
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு: கம்பீரமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேலை விஷயமாக நல்ல தகவல் வந்துசேரும்.
மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
கும்பம்: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.
மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் காட்ட வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT