Published : 29 Aug 2020 06:22 AM
Last Updated : 29 Aug 2020 06:22 AM
மேஷம்: எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணவரவு திருப்தி தரும்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.
கன்னி: மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வீடு, மனை வாங்கும் காலம் கனிந்து வரும்.
துலாம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும்.
விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பத்துக்குள் வீண் விவாதங்கள் மீண்டும் தலைதூக்கும்.
மகரம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ரகள்.
கும்பம்: சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு மாறுவது குறித்து ஆலோசிப்பீர்கள்..
மீனம்: கடின உழைப்பால் காரியங்களை சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT