Published : 25 Aug 2020 06:22 AM
Last Updated : 25 Aug 2020 06:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம்: உங்களின் செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் ஆசாபாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது தலைதூக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. மாலை முதல் தொட்ட காரியங்கள் துலங்கும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தும் சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பய உணர்வு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x