Published : 16 Aug 2020 06:34 AM
Last Updated : 16 Aug 2020 06:34 AM
மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்
ரிஷபம்: வெகுநாட்களாக மனதை உறுத்திவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு காண்பீர்கள். வாகனச்செலவு நீங்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும்..
மிதுனம்: மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.
கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்: புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.
கன்னி: எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தொடரும்.
துலாம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
தனுசு: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். முக்கிய அலுவல் பொருட்டு பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மனைவிவழி உறவினர் உதவுவார்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினரால் ஆதாயம் உண்டு.
மீனம்: தெளிவான முடிவுகளை எடுத்து குடும்பத்தினரை அசத்துவீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT