Published : 15 Aug 2020 06:02 AM
Last Updated : 15 Aug 2020 06:02 AM
மேஷம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அனபுத் தொல்லைகள் விலகும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும்.
மிதுனம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கடகம்: உறவினர்களின் வருகையால் செலவினங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். திடீர் பயணம் ஏற்படும்.
சிம்மம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று முடியும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னி: அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்.
மகரம்: கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்துசேரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT