Published : 14 Aug 2020 06:26 AM
Last Updated : 14 Aug 2020 06:26 AM
மேஷம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
ரிஷபம்: வாடகை வீட்டின் உரிமையாளரின் நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்/ அடுத்தடுத்து பிரச்சினைகள் அணிவகுத்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள்.
கன்னி: வசதி, வாய்ப்புகள் பெருகும். நீண்டநாள் கனவு நனவாகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
துலாம்: சாலையை கடக்கும்போது நிதானம் தேவை. கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். மாலை முதல் எதிர்ப்புகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். அடிமனதில் ஏதோ ஒரு பய உணர்வு அவ்வப்போது தலைதூக்கும்.
தனுசு: இழுபறியாக இருந்துவந்த பல காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிரச்சினைகள் வெகுவாக குறையும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அடிக்கடி செலவுவைத்த வாகனத்தை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
மீனம்: எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT