Published : 13 Aug 2020 06:39 AM
Last Updated : 13 Aug 2020 06:39 AM
மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமின்மை, அசதி ஏற்படக் கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்: செலவினங்கள் கூடும். நீண்டநாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டை ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். நவீன மின்சாதனம், ஆடை, ஆபரணங்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.
சிம்மம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
கன்னி: தன்னம்பிக்கை, மனோதைரியம் பிறக்கும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
துலாம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். திடீர் பயணம் உண்டு.
விருச்சிகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.
தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் விருப்பப்படி உயர் கல்வியில் சேர்ப்பீர்கள். பங்கு வர்த்தகம் மூலமாக பணம் வரும். பால்ய நண்பரால் உதவிகள் கிடைக்கும்.
மகரம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.
கும்பம்: வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலை உண்டாகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT