Published : 09 Aug 2020 06:54 AM
Last Updated : 09 Aug 2020 06:54 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களால் தர்மசங்கடமான சூழல் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிதாக வாங்க திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.

கடகம்: சமயோசித புத்தியால் காரியங்களை சாதிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோயில் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

சிம்மம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். திடீர் உடல்நலக் குறைவு ஏற்படக் கூடும். கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம்.

கன்னி: மனைவிவழி உறவினர் உதவுவார். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்க திட்டமிடுவீர்கள்.

துலாம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். குடும்ப சூழ்நிலை அறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும்.

தனுசு: பழைய சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வீட்டு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.. நட்பு வட்டம் விரியும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்..

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விலகியிருந்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: வீண் செலவுகள் வரக்கூடும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்படலாம். அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x