Published : 07 Aug 2020 05:55 AM
Last Updated : 07 Aug 2020 05:55 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். மூத்த சகோதரர் வகையில் சில சிக்கல்கல் வரக் கூடும். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்களை வாங்குவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். திடீர் வரவு உண்டாகும்.

கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக் கூடும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: பால்ய பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

விருச்சிகம்: நண்பர்கள், உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். மனதில் நிலவிய வீண் குழப்பங்கள் நீங்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். அண்டை அயலாருடன் அளவுடன் பழகுவது நல்லது.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

மீனம்: எதையும் திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x