Published : 06 Aug 2020 06:54 AM
Last Updated : 06 Aug 2020 06:54 AM
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனை திருப்பி செலுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. பால்ய நண்பரை சந்திப்பீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
சிம்மம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்திருந்த பணம் வரும். மனைவிவழியில் உதவியுண்டு.
கன்னி: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். விஐபிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த காரியம் இப்போது கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். புது வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.
மகரம்: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கம் விலகும்.
கும்பம்: பகை, விரயச் செலவு, முன்கோபம், திடீர் பயணம் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் உண்டாகும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT