Published : 30 Jul 2020 06:34 AM
Last Updated : 30 Jul 2020 06:34 AM
மேஷம்: மறதியால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பதற்றம் வரும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மனைவிவழி உறவினர்கள் உறு துணையாக இருப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்: முக்கிய வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.
கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை சந்திப்பீ்ர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூல மும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.
தனுசு: வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் வரும்.
மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர் கள் ஆதரவாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
மீனம்: புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT