Published : 27 Jul 2020 06:25 AM
Last Updated : 27 Jul 2020 06:25 AM
மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்: பணப்புழக்கம் திடீரென அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
கன்னி: துடிப்புடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பம் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் எதிர்பாராது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மோதல் போக்கு விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். திடீர் பயணம் ஏற்படலாம்.
மீனம்: அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT